OMICRON LESS LIKELY TO PUT YOU IN THE HOSPITAL, UK STUDIES

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று இங்கிலாந்து சுகாதாராத்துறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Omicron less likely to put you in the hospital

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இந்த நோய் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

முன்னதாக டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 2-வது அலை நோய் தொற்று ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனால் டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? என இங்கிலாந்து சுகாதாராத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாகவும், ஆனால் அது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஆய்வில் டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது...

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

Tags : Seo