சவுந்தர்யா திருமணத்தில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
Home > Tamil Movies > Tamil Cinema Newsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான ஃபோட்டோ நிகழ்வுகள் குறித்து ஃப்போட்டோகிராபர்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகனின் திருமண நிகழ்வுகளை ஃபோட்டோ எடுத்த மேட் இன் மோனோ ஃப்போட்டோகிராபர்கள் ராகேஷ் மற்றும் வாசீம் அகமத் ஆகியோர் Behindwoods2-க்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணம், சங்கீத் நிகழ்ச்சிகளில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருந்தன. பேரக்குழந்தைகளுடன் இருக்கும் போது அது சூப்பர் ஸ்டார் தானா என்ற சந்தேகம் வந்தது. அவர்களிடம் ஒரு அன்பான தாத்தாவாகவே இருந்தார்.
மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள், திரையுலகினர் பங்கேற்ற இவ்விழாவில் உணர்ச்சிபூர்வமாக சில விஷயங்கள் நடந்தது அது அனைத்தையும் படம் பிடித்திருக்கிறோம். தனுஷின் இளைய மகன் லிங்கா தனுஷ் ஒரு ஃபோட்டோகிராபி பிரியர். எங்களுடன் இணைந்து அவரும் கேமரவை எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்தார்.
இந்த திருமணத்தில் நாங்களும் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவராக இருந்ததால், அழகான அனைத்து தருணங்களையும் படமாக்கினோம் என கூறியுள்ளனர்.
மேலும், இந்நிகழ்ச்சியின் மிகுந்த சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், சங்கீத் நிகழ்ச்சியில் முத்து பாடலுக்கு ரஜினி ஆடியதும், அன்றைய நிகழ்ச்சி முடியும் போது நடிகர் தனுஷ் தனது ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடினார். அவருடன் இணைந்து அவரது குடும்பத்தினரும் ஆடி மகிழ்ந்தது அற்புதமாக இருந்ததாக தெரிவித்தனர்.